கழகம் பற்றி
தன் நோக்கில் கனன்றுகொண்டிருந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேட்கைக்கு உருவம் கொடுக்க, வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் உருவாக்கிய அரசியல் இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இயங்கும் முதன்மை இயக்கம் என்றீரா லட்சிய நோக்குடன் தொடங்கப்பட்டதே நம் த.வெ.க.
நமது நாட்டின் விதிமுறைகளையும், நமது மக்களின்
உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து நீக்குடன்
போராட உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை
எப்போதும் போற்றுவோம்.
நமது அனைவரது தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம்
செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றி
வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து,
அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம்,
சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள
தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து,
என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன்
என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில்
உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி,
அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப்
பாடுபடுவேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற
சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று
உளமார உறுதிகூறுகிறேன்.
